Photo
Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும்
.
Friday, 8 April 2011
தமிழ்ப் பழமொழிகள்
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment