Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Sunday, 15 May 2011

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?

இது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message ஒன்று வந்து நிற்கும்.

நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.



வழிமுறைகள்

strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.

Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.

Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.

Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.

Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கண்ட வழிமுறைகள் தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router இனை unplug செய்து திரும்ப இணைத்துவிட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.

உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) “ipconfig /all” கட்டளை அனைத்து IP முகவரியினையும் காண்பிக்கும்.

No comments:

Post a Comment